பாறை குழிக்குள் பாய்ந்த டிராக்டர் - இளைஞர் உயிரிழப்பு.

தென்னிலை அருகே கல்குவாரி பாறை குழிக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.;

Update: 2024-05-09 02:58 GMT

 சேலம் மாவட்டம், ஓமலூர், சீலவாடி அருகே உள்ள வென்னாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 27. இவர் கம்ப்ரஸர் ட்ராக்டர் டிரைவர். இவர்,கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, பேரக்கம்பாளையம் பகுதியில் செயல்படும் கணேஷ் முருகன் கிரசரில் பணியாற்றி வந்தார். மே 7ஆம் தேதி மதியம் 3:30-மணி அளவில், கம்பரசர் டிராக்டரில் கல்குவாரிக்குள் சென்றபோது, டிராக்டரை வேகமாக இயக்கியதால் 10-அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ரமேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரமேஷ் -சை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரமேஷின் மனைவி மோகனப்பிரியா வயது 24 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ரமேஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags:    

Similar News