தச்சநல்லூரில் சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல்
தச்சநல்லூரில் சாலை விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.;
Update: 2024-03-20 08:57 GMT
சாலை விரிவாக்க பணி
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் தற்பொழுது சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக ஒருபட்சமாக வாகனங்கள் சென்று வருகின்றது. இவ்வாறு வாகனங்கள் சென்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.