பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
மயிலாடுதுறையில் சொத்து தகராறு காரணமாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டுக்குச் செல்லும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Update: 2023-12-25 16:00 GMT
மயிலாடுதுறை நகர் சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி ஜோதி தம்பதியினர். இதில் அன்னலட்சுமி பிரவியிலேயே பார்வையற்றவர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவரது திருமணத்தின்போது அவரது தாயார் தனது பெயரில் உள்ள இடத்தை அளித்துள்ளார் . அதில் அன்னலட்சுமி வீடு கட்டி குடியிருந்து வருகிறார் . இதற்கிடையே அந்த இடத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என அன்னலட்சுமியின் சகோதரர்கள் தகராறு செய்து. திடீரென்று அவர் வீட்டுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இது குறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறுகிறார்.