கோவை: ஆளுநர் ரவி வந்தவுடன் துணைவேந்தர் நியமனம் முறையாக நடைபெறுகிறது - அண்ணாமலை !
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட,பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ஜாபர் சாதிக் வழக்கில் நீதிபதி வெளியேறியதில் வேறு ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா? டெக்னிக்கல் காரணமாக இருக்காது. ஆளுங்கட்சி சம்மந்தப்பட்ட நபர் என்பதால் அது தொடர்பாக விளக்கம் தேவை. தவறான முறை மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதாக நீதிபதி கேள்வி கேட்டு உள்ளனர். தி.மு.க சார்ந்த வழக்கறிஞருக்கு காட்டமாக கேள்வி கேட்டு உள்ளனர். அவர்களாக சொல்லும் வரை இதில் என்ன என்று தெரியவில்லை. விளக்கம் வேண்டிய கட்டாயம் உண்டு.நீதிபதிகள் ஓப்பன் நீதிமன்றத்தில் டோன்ட் டேக் கோர்ட் ஃபார் கிராண்டெட் என எம்.பி தி.மு.க வழக்கறிஞர்கள் சொன்னதை பார்த்து உள்ளேன். சபாநாயகர் கண்ணாடியை பார்க்க வேண்டும். தி.மு.க தொண்டர்களை விட சபாநாயகர் வேலை செய்கிறார். தன் இருக்கைக்கு நடு நிலைமையாக இருக்க வேண்டும். தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம், பல்கலைக் கழக மானிய குழு ஆகிய விதிகளை கல்வி மாநில பட்டியலில் இல்லை. தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க யாருக்கு உரிமை கொடுத்து உள்ளனர். ஆளுநர் ரவி வந்தவுடன் துணைவேந்தர் நியமனம் வெளிப்படையாக நடைபெறுகிறது என தெரிவித்தார்.