தருமபுரியில் 41மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 41 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா தலைமையில் நடைபெற்றது

Update: 2024-04-08 15:18 GMT

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தல் பணிகள் குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 41 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா, இ.ஆ.ப. தலைமையில்,

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இ.ஆ.ப.. காவல் பொது பார்வையாளர் விவேக் ஷியாம். இ.கா.ப. ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதுகுறித்து தருமபுரி தேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால்,

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் தருமபுரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்களை (Observers) நியமித்துள்ளது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை குறித்து எந்தவிதமான புகார் அல்லது பிரச்சனை இருந்தாலும், அதை பார்வையாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்து உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லுவதற்கான சாலை வசதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மற்றும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கு தேவையான அழியா மை, உறைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் பாதுகாப்பாக வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாள் அன்று எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி வாக்குப்பதிவு சிறப்புற நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

அமைதியான மற்றும் சுமூகமான வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்வதற்கும். வாக்காளர்கள் எந்தவித தொந்தரவுமின்றி தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கும், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார். இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) சையது மொஹைதீன் இப்ராஹிம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொறுப்பு அலுவலர் தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அருண்மொழித்தேவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாகுல் ஹமீத், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அசோக்குமார், தேர்தல் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News