அகவிலைப்படி வழங்காததை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சேலத்தில் அகவிலைப்படி வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-19 09:03 GMT

ஆர்ப்பாட்டம் 

அகவிலைப்படி வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி வழங்கவில்லை. பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது என்று கூறி போலீசார் எங்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அகவிலைப்படி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News