திருச்சி மத்திய சிறை முற்றுகை: மனித நேய ஜனநாயக கட்சி தீர்மானம்

திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு 20க்கும் மேற்பட்ட வேன்களில் செல்வது என மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

Update: 2024-01-16 15:15 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறையில்...மனிதநேய ஜனநாயக கட்சி மயிலாடுதுறை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலிம் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர்கள் மிஸ்பா,லியாகத் அலி,அஜ்மல் உசேன் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், MJTS மாநில துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

20 ஆண்டுகளாக சிறையில் கிடக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு 20க்கும் மேற்பட்ட வேன்களில் செல்வது, பாலஸ்தீன, உக்ரைன் போர்களை உடனடியா நிறுத்தி உலக பொருளாதாரத்தை காப்பாற்ற சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்வது, ஜம்முகாஷ்மீர் உரிமையை பறித்த 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தவேண்டும்.

தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் தமிழக அளுநரை மாற்றவேண்டும். மழைவெள்ள பாதிப்பு குறித்து தமிழக அரசு கேட்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு வழஙகவேண்டும், கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் 31% குறைந்தபிறகும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெற பிரதமர் மோடி அனுமதிப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ அரசு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தியதை திரும்ப பெறவேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News