குடிபோதையில் எஸ்.எஸ்.ஐயை தாக்கிய இருவர் கைது

கொல்லங்கோடு அருகே சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளரை குடி போதையில் தாக்கிய கேரளாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-06-11 04:07 GMT

கைது செய்யப்பட்ட தாஸ்,சுரேஷ்

கொல்லங்கோடு அருகே குமரி கேரள எல்லையான மைக்கல் காலனியில் ஒரு சோதனை சாவடி உள்ளது. இங்கு நேற்று மாலையில் நித்திரவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் பணியில் இருந்தார். அப்போது 2 பேர் மது போதையில் வந்தனர். அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் தனது செல்போனை எடுத்து அவர்களை படம் பிடிக்க முயன்றார்.உடனே இருவரும் சேர்ந்து போலீஸ்காரரின் செல் போனை சேதப்படுத்தி விட்டு அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

Advertisement

இதுகுறித்து முருகன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு கவந்த போலீசார் அந்த பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி சுற்றி திரிந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த தாஸ்,சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News