மணல் கடத்தல் இருவர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரத்தில் உள்ள பெருவளை வாய்க்காலில் நேற்று மாலை சட்டவிரோதமாக கடத்துவதற்காக மணலை சேமித்த இருவரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-03-15 10:44 GMT
மணல் கடத்தல்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாண்டிய புரத்தில் உள்ள பெருவளை வாய்க்காலில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக வாத்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சோனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் மணலை சேமித்து வைத்திருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் முசிறி தாலுகா சின்ன செல்லாங்காடு குளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சிவாதயாளன் மற்றும் புலிவலம் சிறுகுடி பாதையைச் சேர்ந்த 25 வயதில் ரஞ்சித் எனக்கு தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த வாத்தலை போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் படுத்தி சிறையில் அடைத்தார்.