மணல் திருட்டு இருவர் கைது !

மணல் திருட்டு இருவர் கைது - மூன்று லாரி, 9- யூனிட் மணல் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.

Update: 2024-03-01 12:31 GMT
மணல் திருட்டு மூன்று லாரி, 9- யூனிட் மணல் பறிமுதல். இருவர் கைது. காவல்துறை நடவடிக்கை. வாங்கல் காவிரி ஆற்று பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வாங்கல் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 29ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட ராமேஸ்வரப் பட்டியில் இருந்து செம்மடை வரையிலான இடைப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கோவை மாவட்டம் காரணம்பேட்டை, சூலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் காளீஸ்வரன் வயது 26, நாமக்கல் மாவட்டம், மோகனூர், மேலப்பட்டி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சசிகுமார் மகன் முகிலன் வயது 22, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, அண்ணா நகரை சேர்ந்த மும்மூர்த்தி மகன் சுந்தர்ராஜ் வயது 48, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, அந்தரிப்பட்டி,கோட்ட பல்லூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மகள் ஐஸ்வர்யா, கோவையைச் சேர்ந்த கார்த்தி, கரூர் செவ்வந்திபாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்த பிச்சமுத்து ஆகிய 6 பேரும் மூன்று லாரிகளில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் காளீஸ்வரன் மற்றும் முகிலன் ஆகிய இருவர் மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். மேலும் ,அவர்கள் கடத்தி வந்த மூன்று லாரிகளையும், மூன்று லாரிகளில் இருந்த 9- யூனிட் மணலையும் பறிமுதல் செய்து, ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News