ஆரணியில் குட்கா கடத்திய இருவர் கைது
ஆரணி அருகே குட்கா பொருட்களை கடத்தி சென்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 19 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-01-16 02:03 GMT
திருவண்ணாமலையிலிருந்து செய்யாறுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் கடத்திச் செல்லப்பட்ட 19 மூட்டை குட்கா பொருட்களை ரகசிய தகவலின் பெயரில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான கிராமிய போலீசார் எஸ்.வி நகரம் கூட்ரோடு பகுதியில் மடக்கி பிடித்து 2 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.