டூவீலர் ஷோரூமில் உதிரி பாகங்களை களவாடிய இருவர் கைது

கரூரில் உள்ள பஜாஜ் ஷோருமில் உதரிபாகங்களை திருடிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-31 01:30 GMT

உதிரிபாகங்கள் திருட்டு

கரூர்-கோவை சாலையில் வைபவ் பஜாஜ் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில், கரூர் தாந்தோணிமலை, கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் ரஞ்சித் வயது 28 என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்தில் கரூர் ராயனூர் வி கே டி மஹால், வெள்ளாள கவுண்டர் நகர் ஐந்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 41 என்பவரும் மதுரை, சிறுவலை, அம்பலத்தாடி பகுதியைச் சேர்ந்த அருண் வயது 26 ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும், டிசம்பர் 29ஆம் தேதி மாலை 3 மணி அளவில், அவர்களது நிறுவனத்தில் இருந்த ரூபாய் 20,000- மதிப்புள்ள 23 டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ்-ஐ களவாடி உள்ளனர். இவர்கள் களவாடும் போது மேலாளர் ரஞ்சித் கையும் களவுமாக பிடித்து, கரூர் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர். பின்னர், ஷோரூம் கடையில் இருந்த உதிரிபாகங்களை களவாடிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News