ஸ்கூட்டரில் சாராயம் கடத்தல் -இருவர் கைது                   

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்..                   

Update: 2024-06-27 12:18 GMT

கோப்பு படம்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்வேளூர் போலீசார்  ஆழியூர், கடம்பரவாழ்க்கை மற்றும்  ஆழியூர் பிரிவு சாலையில்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடம்பரவாழ்க்கை மேலத்தெரு பகுதியில் ஸ்கூட்டரில்  வந்த வாலிபரை நிறுத்தி  விசாரணை நடத்தினர்.  விசாரணையில் ஆழியூர்  மேலத்தெரு ஜபருல்லா மகன் சிராஜுதீன்  ( 29)  என்பதும் காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து  116 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.இதே போல் ஆழியூர் பிரிவு சாலையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து  ஸ்கூட்டரில் வந்த ஆழியூர்  மேலத்தெரு ஜபருல்லா மகன் முகம்மது ரபிக் ( 27) என்பவரது ஸ்கூட்டரை சோதனை செய்த போது,  114 லிட்டர் சாராயம்  கடத்தி வந்தது தெரியவந்தது. சாராயம் கடத்தி வந்த சிராஜுதீன் மற்றும் முகம்மது ரபிக் இருவரும் அண்ணன்- தம்பி ஆவார்கள். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் கடத்தி வந்த சிராஜுதீன் , முகம்மது ரபிக் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 230 லிட்டர் சாராயம் மற்றும் 2 ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.      பட

Tags:    

Similar News