திருவாரூர் அருகே ஆசிட் வெடித்து சிதறி இருவர் படுகாயம்
திருவாரூர் அருகே அரிசி ஆலை பாய்லர் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டபோது ஆசீட் வெடித்து சிதறி இருவர் படுகாயம் அடைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-05 11:40 GMT
திருவாரூர் அருகே அளிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது இதில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் பாயிலர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த நாகூரான், பௌத்தரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் இருவரும் ஆசிட் ஊற்றி சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் .
அப்போது எதிர்பாராத விதமாக ஆசிட் பார்லரில் இருந்து வெடித்து சிதறியதில் இருவர் படுகாயம் அடைந்தனர் இதனை தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.