இருசக்கர வாகனங்கள் மோதல் - இருவர் உயிரிழப்பு

Update: 2023-12-19 06:33 GMT

சுந்தரவேல்,ரமேஷ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குட்டி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் ரமேஷ் 27. இவர் பந்தரப்பள்ளி அருகே உள்ள கல்லுகுட்டை ஏரி பகுதியில் கிரிக்கெட் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் பயிற்சி பள்ளிக்கு சேன்று பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

  அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுந்தரவேல் 32. இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் . ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்து மறுபடியும் இரவு பணிக்காக ஓசூருக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்திலேயே சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது பாரதி நகர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ரமேஷ் மற்றும் சுந்தரவேல் ஆகியோர் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இருவரும் தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News