டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-15 06:35 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி, மண்டகிரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 65. இவர் மே 11-ம் தேதி காலை 6 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் உள்ள தங்கம் மளிகை கடை அருகே சென்றபோது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர்,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செங்கோட்டு வேலு வயது 36 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், ராமலிங்கம் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ராமலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய செங்கோட்டுவேலு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News