டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் படுகாயம்
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
Update: 2024-03-31 17:18 GMT
காவல்துறை விசாரணை
கரூர் சுங்ககேட், காவிரி நகர், 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த ராமமூர்த்தி மகன் ராஜேஷ்மணி வயது 43. இவர் மார்ச் 28ஆம் தேதி இரவு 9.50 மணியளவில், திருச்சி - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் சுங்ககேட் வி.எஸ் மருத்துவமனை அருகே சென்றபோது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் வயது 25 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், ராஜேஷ்மணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில், இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ் மணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, தினேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.