அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
By : King 24x7 Angel
Update: 2024-02-29 09:40 GMT
அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் சிகிச்சை பெற வந்தார். அவரது உடல்நிலை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதே சமயம் அவருடன் யாரும் வரவில்லை என்பதை அறிந்து கொண்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி இருக்கை மருத்துவர் குமார், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த முதியவர் உடலை அடையாளம் காண்பதற்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இது தொடர்பாக இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.