திருநாவலுாரில் ஒன்றிய குழு கூட்டம்

திருநாவலுாரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-30 11:41 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் போக்கால் அதிருப்தியடைந்த தி.மு.க.. ஒன்றிய சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மான பதிவேட்டில் கையெழுத்திடாமல் புறக்கணித்தனர். 

 உளுந்துார்பேட்டை தொகுதி திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்தில் வறட்சி பணிகளுக்கு பொது நிதியிலிருந்து குடிநீர் பிரச்னை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடது.

ஆனால், இந்த நிதிக்கான பணிகளை ஒன்றிய கவுன்சிலருக்கு வழங்காமல் உளுந்துார்பேட்டை ஆளும்கட்சி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் தன்னிச்சையாக செயல்பட்டு சில ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இது தி.மு.க., ஒன்றிய சேர்மன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் மாதாந்திர கூட்டத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் முடிவெடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ராமலிங்கம், பி.டி.ஓ. (கி.ஊ.) ஜோசப்ஆனந்தராஜ், மேலாளர் சாந்தி, முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர்களில் சசிகலா, மாலதி, ஆறுமுகம், பிரபு, வேல்முருகன், முருகன், செல்வராஜ், பாரதி உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News