வட வெட்டி அங்காளம்மன் ஐப்பசி அமாவாசை திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் வடவெட்டி அங்காளம்மன் ஐப்பசி மாத அமாவாசை திருவிழாவில் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு காலையில் கோபால விநாயகர் ,பெரியாழி, முத்துமாரியம்மன்நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்க, மழை வேண்டியும் ஆலய வளாகத்தில் சிவராமன் சிவாச்சாரியார் சிறப்பு யாகம் செய்தார்.மாலை ஆலய வளாகத்தில் அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டு தாரை தப்பட்டை முழங்க,பம்பை உடுக்கை உடன் மேல தாளங்கள் முழங்க சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருநாள் பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் பட விளக்கம்: செய்திருந்தனர். சேத்துப்பட்டு அடுத்த வட வெட்டி அங்காளம்மன் கோவிலில் ஐப்பசிமாத அமாவாசை முன்னிட்டு அலங்கார ரூபத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.