வலம்புரி செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திமிரி அருகே உள்ள வலம்புரி செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-05-20 15:04 GMT

கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே ஆனைமல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த வலம்புரி செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் முதற்கால யாக பூஜை, கணபதி பூஜை, சங்கல்பம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்ட்டை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, கும்ப பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடைபெற்றது. தொடர்ந்து வேத பட்டாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை தலையில் சுமந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கோபுர கலசத்தின் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கருவறையில் உள்ள வலம்புரி செல்வவிநாயகர்க்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

Tags:    

Similar News