வந்தவாசி : விமரிசையாக நடந்த ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்
வந்தவாசியில் ஸ்ரீஅமிா்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
Update: 2023-12-01 05:17 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, யாக சாலை பூஜைகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன. பின்னா் புதன்கிழமை காலை விசேஷ திரவிய ஹோமம், யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கலசங்களை தலையில் சுமந்து ஆலய வலம் வந்தனா். பின்னா் புதன் கிழமை காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.