ஆ.ராசாவுக்கு எதிராக மதுரையில் வெள்ளாளர் சமுதாயத்தினர் சாலை மறியல்
ஆ.ராசாவுக்கு எதிராக மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் வெள்ளாளர் சமுதாயத்தினர் கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
ஆ.ராசாவுக்கு எதிராக மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் வெள்ளாளர் சமுதாயத்தினர் கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்ஜிஆர் மற்றும் வ.உ.சி உள்ளிட்டோரை அவதூறாக பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்தநிலையில்., வெள்ளாளர் அமைப்பினர் மற்றும் அதிமுக கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து மதுரையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மதியம் மதுரை விமான நிலையம் வருகை தந்த ஆ.ராசா தனியார் விடுதியில் தங்கியிருந்து தூத்துக்குடி செல்லும் சாலை வழியாக விரகனூர் சுற்றுச்சாலை வழியே மதுரை மாநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் வருகை தர
முற்பட்டார். அவர் வருவதை அறிந்த மதுரை வெள்ளாளர் முன்னேற்ற கழக அமைப்பின் தலைவர் அண்ணா சரவணன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் விரகனூர் சுற்றுச்சாலையில் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அவர்களை அப்பகுதியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.