போளூரில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் திடீர் ஆய்வு

Update: 2023-11-15 07:32 GMT

டி.ஐ.ஜி ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர் பகுதியில் வடக்கு மண்டல வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இணைந்து திடீரென ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். போளூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல், மற்றும் நகரின்பாதுகாப்பு குறித்தும் பஜார் வீதி, பேருந்து நிலையப் பகுதி, அண்ணாசாலை,சிந்தாதிரிப்பேட்டை, தெரு வேலூர்-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் சரக காவல் துறை துணைத்தலைவர் முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது போளூர் காவல்துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி மற்றும் ஆய்வாளர் ஜெயபிரகாஷிடம் நகரின் பாதுகாப்புத் தன்மை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது உள்ளிட்டவைகளை கேட்டறிந்து ஆய்வு செய்தனர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News