கால்நடை மருத்துவ முகாம்

பாலக்கோடு அருகே காட்டம்பட்டியில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-12-16 08:44 GMT

பாலக்கோடு அருகே காட்டம்பட்டியில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம். பாலக்கோடு, டிச.16: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கோதிசத்தியபிரபு, ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் ஆகியோர் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் . மணிமாறன் முன்னிலை வகித்தார். முகாமில் பேளாரஅள்ளி கால்நடை உதவி மருத்துவர் நடராஜன் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார். மேலும் கன்றுகுட்டிகள் மற்றும் ஆடுகள் ஆகியவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கால்நடைகள் வெறும் வயிற்றுடன் அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தை கொடுக்காமல் மாற்றி தருவது அவசியம் என எடுத்துரைத்தார். முகாமில் கால்நடைகளின் ரோமத்தில் உண்ணி, பேன், தெள்ளு பூச்சி ஆகிய புற ஒட்டுண்ணிகளை நீக்கம் செய்ய ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கன்று.குட்டிகள் பேரணி நடைப்பெற்றது, இதில் சிறந்த 5 கிடாரி கன்றுகள் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மைக்கான சான்றிதழ்கள் கறவை பசு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவையான லிவர் டானிக், வைட்டமின் சிடானிக், பூச்சி மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நாகராஜ் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News