மல்லர் கம்ப போட்டியில் விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் சாதனை படைத்தனர்.

Update: 2024-02-29 05:05 GMT

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் சாதனை படைத்தனர்.


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறையில் படித்து வரும் மாணவர்கள் ஹேமச்சந்திரன், பாலாஜி, அபினேஷ், வெங்கட், ரோகித், நித்திஷ்குமார் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்ப குழு விளையாட்டுப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் தனிநபர் போட்டியில் ஹேமச்சந்திரன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் டையூவில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் விளையாட்டு மல்லர்கம்ப குழு போட்டியில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பிரமிடு குழு பிரிவில் தங்கப்பதக்கமும், அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கேலோ இந்தியா போட்டியில் 5-ம் இடத்தையும் ஹேமச்சந்திரன் பெற்றுள்ளார். அதேபோன்று மாணவர் பாலாஜி, தேசிய அளவிலான பீச் விளையாட்டு மல்லர்கம்ப குழு பிரிவில் வெள்ளிப்பதக்கமும், பிரமிடு குழு விளையாட்டில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். மேலும் இவர் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் மல்லர்கம்ப குழு விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

அதேபோன்று பெண்கள் பிரிவில் தமிழ்த்துறை மாணவி கிருஷ்ணகுமாரி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர்கம்ப குழு விளையாட்டுப்போட்டியில் 7-ம் இடத்தையும், டையூவில் நடைபெற்ற பீச் மல்லர்கம்ப விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கமும், அசாமில் நடைபெற்ற பல்க லைக்கழகங்களுக்கு இடையிலான கேலோ இந்தியா பல்கலைக்க ழக அளவிலான போட்டியில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளார். விலங்கியல் துறை மாணவி வசந்தி, அகில இந்திய பல்கலைக்கழ கங்களுக்கு இடையிலான மல்லர்கம்ப போட்டியில் குழு பிரிவில் 7-ம் இடத்தையும், கேலோ இந்தியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர்கம்ப குழுப்போட்டியில் 7-ம் இடத்தையும், பொருளியல் துறை மாணவி யாழினி, அகில இந்திய பல்கலைக்க ழகங்களுக்கு இடையிலான மல்லர்கம்ப குழு போட்டியில் 7-ம் இடத்தையும், டையூவில் நடைபெற்ற பீச் மல்லர்கம்ப குழுப்போட்டி யில் வெண்கல பதக்கமும், கேலோ இந்தியா பல்கலைக்கழக அளவிலான போட்டியில் 7-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

சாதனை படைத்த மாணவ- மாணவிகளை கல்லூரியின் முதல்வர் சிவக்கு மார், துணை முதல்வர் சேட்டு மற்றும் அனைத்துத்துறை தலைவர் களும், பேராசிரியர்களும், உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா, விழுப்புரம் கேலோ இந்தியா பயிற்சியாளர் ஆதித்யன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News