விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-28 15:49 GMT

விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தனர்.


விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (28.05.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை பரிதி உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News