மத்திய அரசு திட்டங்களை அறிய மைபாரத் போற்ட்டல்
இளைஞர்கள் மைபாரத் போற்ட்டலில் பதிவு செய்து மத்திய அரசு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்
By : King 24x7 Website
Update: 2023-12-18 03:02 GMT
மத்திய அரசின் கீழ் நேரு யுவகேந்திரா செயல்பட்டு வருகிறது இதில். 18 முதல் 29 வயது வரையுள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள், மத்திய அரசின் My Bharat Portal-ல் பதிவு செய்து கொள்ள வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் , மத்திய அரசு இளைஞர்களுக்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து இந்த இணைய தளத்தில் எளிதில் அறிந்துகொள்ள முடியும் என்றும், மாவட்ட அளவில் நேரு யுவகேந்திரா மூலம் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள, My Bharat Portalல், பதிவு செய்துள்ளவர் களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும், இந்த தளத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடியும் என்றார். மேலும் இந்த தளத்தில் பதிவு செய்ய இளைஞர் மகளிர் மன்ற நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 15வயது முதல் 29வயது வரை உள்ள அனைவரும் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் என்றார். My Bharat Portal-, சென்று, இளைஞர் பதிவை தேர்வு செய்து, உங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பெயர்களை எளிய முறையில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்து கொள்வதன் மூலம், மத்திய அரசு இளைஞர்களுக்கான செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.