வாக்காளர் சேர்க்கை, நீக்கல் முகாம்

ராசிபுரத்தில் வாக்காளர் சேர்க்கை நீக்கல் முகாம்;

Update: 2023-11-26 12:52 GMT

ராசிபுரத்தில் வாக்காளர் சேர்க்கை, நீக்கல் முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம்பி K.R.N ராஜேஸ்குமார் அறிவுறுத்தல் படியும், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் ஆலோசனை படியும், ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர் வழிகாட்டுதல்படியும் ராசிபுரம் பெரிய கடை வீதியில் அமைந்துள்ள 16 வது வார்டு அகரம் வெள்ளாசெட்டியார் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி நடந்த சிறப்பு வாக்காளர் சேர்க்கை, நீக்கல் முகாமில் 16 மற்றும் 22வது வார்டு கழக நிர்வாகிகள், பொறுப்பாளர் சிறப்பாக பணியாற்றினர். நிகழ்வில்  வார்டு கழக செயலாளர்கள் பா.பூபதி, மாதையன், ராசிபுரம் நகர பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜராஜசோழன், 16 வது வார்டு கழக உறுப்பினர் விஸ்வேஸ்வரன், 16 வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்மணி, துணை அமைப்பாளர்கள் பிரவீன், வெங்கடேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News