VVG நகர் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.சூதாட்ட அட்டைகள் பணம் பறிமுதல்.
VVG நகர் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.சூதாட்ட அட்டைகள் பணம் பறிமுதல்.;
VVG நகர் அருகே பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.சூதாட்ட அட்டைகள் பணம் பறிமுதல். கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவிஜி நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆர்த்திக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் விவிஜி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வெங்கமேடு ரொட்டி கடை தெருவை சேர்ந்த மோகன் பாபு வயது 24 கண்ணதாசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 26 ஆகியோர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூ.100 ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர் வெங்கமேடு காவல்துறையினர்.