ஆதார் சேவை மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை

ஆதார் சேவை மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.

Update: 2024-02-23 12:18 GMT
ஆதார் மையத்தில் குவிந்துள்ள மாணவர்கள்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக பள்ளியிலேயே சேவை சிறப்பு முகாம் நடத்திட வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கற் றுப்புற பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்ற னர். இவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் இணைப்பு தேவைப்படுகிறது. ஏற்க னவே ஆண்டுக்கு முன்பு ஆதார் கார்டை மாணவர்கள் இணைத் துள்ளனர். 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.இதனால், புது ஆதார் இணைப்பு பெறுவதற்காக கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தினசரி மாணவர்கள் குவிந்தவண்ணம் உள்ள நீண்ட நேரமாக காத்திருந்தும்.

சில மாணவர்கள் ஆதார் இணைப்பு புதுப்பிக்காம் லேயே திரும்பிச்செல்லும் நிலை காணப்படுகிறது.பள்ளிகளிலேயே ஆதார் சேவை சிறப்பு மையம் நடத்திட ஏற்பாடுஎனவே, மாணவர்கள் ஆதார் புதுப்பிக்கும் பணிகளுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்துவ தற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர் தற்போது 9, 10, 11 மற் றம் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறும் நிலையில்,

அவர்கள் ஆதார் சேவை மையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளதால், மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News