விருதுநகரில் “நடப்போம் நலம்பெறுவோம்” நடைப்பயிற்சி நிகழ்ச்சி
Update: 2023-11-01 01:41 GMT
விருநகர் மாவட்டத்தில் வரும் 4 ம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் “நடப்போம் நலம்பெறுவோம்” என்ற நடைப்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது தமிழக முழுவதும் வரும் நான்காம் தேதி நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8 கிலோமீட்டர் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள். இந்த நடைப்பயிற்சியானது, மருத்துவ கல்லூரியில் ஆரம்பித்து, மகளிர் காவல்நிலையம் வழியாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வழியே சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வழியாக வெளியே சென்று, ஐஸ்வர்யா மகாலிலிருந்து திரும்பி பின்பு மருத்துவக்கல்லூரியில் முடிவடைகிறது.