செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்ப்பூசணி அறுவடை பணி தீவிரம்
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்ப்பூசணி அறுவடை பணி தீவிரம்
Update: 2024-03-10 12:57 GMT
செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாகும். இங்கு, 5, 000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி, சொட்டு நீர் பாசன முறையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்ப்பூசணி சென்னை, கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. செய்யூர் பகுதியில் பயிரிடப்பட்ட தர்ப்பூசணி, தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், தர்ப்பூசணி அறுவடை பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். 1 டன் தர்ப்பூசணி 10, 000 - 14, 000 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.