மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம்: எஸ்.பி.வேலுமணி

மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-16 16:23 GMT

முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸை கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக சட்டமன்ற அம்மன் அர்சுணன்,கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, கோவை,பொள்ளாச்சி, நீலகிரி,திருப்பூர்,ஈரோடு ஐந்து நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டதாக தெரிவித்தார். கோவை தொகுதியில் ராமச்சந்திரன் உடைய வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் அதிமுக தான் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது எனவும் திமுக மூன்றாண்டு கால ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.

மத்தியில ஆளுகின்ற பாஜகவும் அதன் மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலையும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் இதுவரை எதுவும் செய்யாததால் திமுக கொடுத்த வாக்குறுதி போல் தான் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதியும் என்றார்.

கோவை மாவட்டத்தை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றதும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததும் அதிமுக தான் என்று மக்களுக்கு தெரியும் எனவே ஐந்து தொகுதி அதிமுக வேட்பாளர்களின் வெற்றியும் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். நாங்கள் மக்களை நம்பி நிற்பதாகவும் திமுகவினர் பணத்தை நம்பி நிற்பதாகவும் தெரிவித்த அவர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும் தான் அரசியல் செய்வதாகவும் களத்தில் இல்லை என கூறினார்.

அண்ணாமலை தற்பொழுது அதிமுகவை ஒழிப்போம் எடப்பாடியாரை ஒழிப்போம் என்று பேசி வருவதாகவும் திமுக 38 எம்பிக்களை கொண்டும் எதுவுமே செய்யவில்லை எனவும் தாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி தமிழ்நாட்டு உரிமையை மீட்டெடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும்,

இது மட்டுமின்றி இலங்கை தமிழர் பிரச்சினை,இட ஒதுக்கீடு அனைத்தையும் மீட்டெடுத்தது அதிமுக தான் என தெரிவித்தவர் மற்றவர்கள் கூறுவதில் உண்மையில்லை எனவும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக எதிர்ப்பலைகள் கடுமையாக இருக்கிறது எனவும் திமுக வேட்பாளர்கள் களத்திற்கு கூட செல்ல முடிவதில்லை என தெரிவித்தார்.

எடப்பாடியாரின் பேச்சு உண்மை தன்மையானது நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்ததும் திமுக செய்யாதது என மக்கள் எடப்பாடியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனவும் முழுமையான வெற்றி அதிமுகவிற்கு தான் என தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் மோடியின் பக்கம் செல்கிறார்கள் அதிமுக தலைவர்கள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தது குறித்து கேள்விக்கு ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு செல்வது அண்ணாமலை தான் எனவும் மீடியாவிலும் ட்விட்டரிலும் பேஸ்புக் களில் மட்டும் சந்தித்து கொண்டிருப்பது யார் என மக்களுக்கு தெரியும் என பதிலளித்தார்.

Tags:    

Similar News