திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவி குழுவிற்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 41 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-02-08 10:48 GMT


திருப்பத்தூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 41 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 41 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு , மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 536 குழுக்களை சேர்ந்த 982 பயனாளிகளுக்கு ரூபாய் 40.92 கோடி மதிப்பிலான வங்கி கடன் ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர்.

Tags:    

Similar News