யார் ஆட்சி செய்தாலும் செய்தியாளர்கள் தான் எதிர்க் கட்சி
எந்த கட்சி ஆட்சி செய்தாலும் எதிர்க் கட்சியாக செயல்படுவது செய்தியாளர்கள்தான் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர். டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசினார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட கிளையின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில பொதுச்செயலாளர் கு.வெங்கட்ராமன், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ், பொருளாளர் சாந்தகுமார், துணைத் தலைவர் அருள் குமார், மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீவை ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் நாசரேத் நிக்சன் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட கவுரவ தலைவர் விஜயராஜா, தேசியக்குழு உறுப்பினர் எழுவை என்.அலெக்ஸ் புரூட்டோ, தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி ஆர். முருகன், கோவில்பட்டி மாநகர் மாவட்ட தலைவர் மகேஸ்வரன், வழக்கறிஞர் எம். என். அகமது சாகிபு, சமூக சேவகர் ஏரல் ஜெயபால், தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் தர்மபுரி ஸ்ரீநிவாசன், மூத்த செய்தியாளர்கள் சாத்தை மகாராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் ஞானையா, நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி, மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் பொறியாளர் வே. ரஞ்சன், காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜினஸ் குமார், திருச்செந்தூர் கிருஷ்ணன், ஹரி ஹரன் (எ) அய்யப்பன், சதானந்தம், மைக்கேல், நாராயணன், வாசுதேவன், சங்கர நாராயணன், கிருஷ்ணன், முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கொடியை நாசரேத் நகர முன்னாள் திமுக செயலாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி செல்வகுமார் ஏற்றி வைத்தார். விழாவில் விழாவிற்கு தலைமை வகித்து மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையான அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்று சிறப்பாகவும், நேர்மையாகவும், அரசு பணி செய்யும் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உண்மையான எதிர்க் கட்சியாக செயல்படுவது பத்திரிகையாளர்கள்தான்.
அரசின் மெத்தன போக்கையும் பொதுமக்கள் ஆதங்கத்தையும் தெளிவாக தெரிவிப்பவர்கள் பத்திரிகையாளர்கள்தான். எனவே நீங்கள் உண்மையாகவும், நேர்மை யாகவும், துணிச்சலாகவும் செயல்பட வேண்டும். முக்கியமாக ஒற்றுமையாக தோளோடு தோள் கொடுத்து செயல்பட வேண்டும். உங்களுக்கு பாதிப்பு என்றால் தமிழ்நாடு பத்திரிகையாளர் கள்சங்கம் குரல்கொடுக்கும், உறுதுணையாக நிற்கும். உறுப்பினர்களுக்கு தேவையான திட்டங்களை அரசிடம் இருந்து பெற்றுத்தர பாடுபடும். இவ்வாறு பேசினார் விழாவில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலசங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழா நிகழ்ச்சிகளை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.க. வேணுகோபால் தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க புறநகர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் காளிதாஸ் நன்றி கூறினார். விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க கோவில்பட்டி மாநகர் மாவட்ட செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சுதன், செய்துங்கநல்லூர் சுதாகர், ஸ்ரீவை தினகரன், குமாரவேல், பார்த்தீப சங்கர், வி.எம்.சத்திரம் நாகராஜன், நாசரேத் ஜோயல், ஜெயஷீபா, திருமறையூர் ஆபிரகாம், சாத்தை கவிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.