அம்மாபாளையத்தில் திமுக கட்சியினர் பணபட்டுவாடா?:பாஜகவினர் புகார்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் திமுக பிரமுகர்கள் போலீசாரின் உறுதுணையோடுபணம் பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 11:51 GMT
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம், அம்மாபாளையம் வாக்கு சாவடி மையம் நீலகிரி தொகுதிக்கு உட்பட்டது இங்கு திமுக பிரமுகர்கள் போலீசாரின் உறுதுணையோடு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பாஜகவினர் குற்றம் சாட்டி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த இடத்தில் தகவல் என்று சம்பவ இடத்திற்கு வந்த மாணவர் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினரை சமாதானம் செய்ய ப்பட்டனர் அப்போது பணம் பட்டுவாடாவில் ஈடுபட்டு வந்த திமுகவினர்,
கூட்டத்திலிருந்து நைசாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது இச்சம்பவத்தால் அம்மாபாளையம் பகுதியில் வரும் பரபரப்பாக காட்சி அளித்தது நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.