பஸ் மோதி பெண் பலி
Update: 2023-12-21 11:27 GMT
பூந்தமல்லி அடுத்த, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா, 37; தனியார் நிறுவன ஊழியர். இவர், மாலை, தோழி சித்ரா, 22, என்பவருடன், 'டிவிஎஸ் ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் சென்று, மீண்டும் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தார். வாகனத்தை சுசித்ரா ஒட்டிய நிலையில், சங்கீதா பின்னால் அமர்ந்திருந்தார்.சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி வந்த போது, பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சங்கீதாவின் தலை மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுசித்ரா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சங்கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.