கார் விபத்தில் பெண் பலி
வந்தவாசி அடுத்த எட்டித்தாங்கல் கிராமத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில் பரிதாபமாக பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா ஆனந்தன் மனைவி நந்தீஸ்வரி (65) இவர் நேற்று முன்தினம் எட்டிதாங்கள் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது சேத்துப்பட்டு வந்தவாசி நெடுஞ்சாலையில் இயற்கை உபாதைக்காக சாலையை கடந்துள்ளார். அப்போது கரூரில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் நந்திஸ்வரி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நந்திஸ்வரி படுகாயம் அடைந்தார். உறவினர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் நந்தீஸ்வரி பலியானதாக தெரிவித்தார். சம்பவம் குறித்த தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸ்சார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திண்டிவனத்தைச் சேர்ந்த உறவினர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.