உலக நவீன வாசக்டமி விழிப்புணர்வு - கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2023-11-30 06:52 GMT
 விழிப்புணர்வு வாகனம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் பொதுவாக பெண்களே குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. ஆண்களும் எளிய பாதுகாப்பான முறையில் கருத்தடை செய்து கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஆண்களுக்கு ஏற்படும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் 21 முதல் 27 வரை விழிப்புணர்வு வாரமாகவும் நவம்பர் 28 முதல் டிசம்பர்04 வரை சேவை வழங்கும் வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை இரு வார விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்டு விருதுநகர் மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பாக உலக வாசக்டமி இருவார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆண்களுக்கான தழும்பில்லா நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்பதில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. சிகிச்சை முடிந்த உடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை. இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் கிடையாது. எப்போதும் போல் இல்லற உறவு கொள்ளலாம். எனவே, அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம். கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும்; முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News