மயிலாடுதுறையில் காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க யோகாசன பயிற்சி

மயிலாடுதுறை காவலர்களுக்கு யோகாசன பயிற்சி நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Update: 2024-05-11 13:19 GMT

யோகா பயிற்சியில் ஈடுபட்ட போலீசார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், பெரம்பூர், பாலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட     காவல்துறையினருக்கு  பாதுகாப்பு பணி மற்றும் பல்வேறு பணிகளின்போது  மனஅழுத்தத்தை  போக்குவதற்கான யோகா பயிற்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை டி இ எல் சி தேவாலய வளாகத்தில் நடைபெற்ற யோகாசன பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா   மேற்பார்வையில் காலையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில் தியான பயிற்சி, சித்தாசனம், தடாசனம், பவன முகத்சனம், பர்வதாசனம், மகா முத்ராசனம், யோக முத்திரை பயிற்சி உள்ளிட்ட யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா உட்படமயிலாடுதுறை காவல் உபகோட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டு, பயனடைந்தனர்.

Tags:    

Similar News