என்னை திட்டலாம், ஏன் அடிக்கக் கூட செய்யலாம்; அ.தி.மு.க., வேட்பாளர்

வாக்காளர்கள் என்னை திட்டலாம், ஏன் அடிக்க கூட செய்யலாம், ஊட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் கலகலப் பேச்சு.;

Update: 2024-04-01 14:54 GMT

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஊட்டி கடநாடு கிராமத்தில் படுகு மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஊட்டி அருகே உள்ள கடநாடு கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார்.

அங்கு அவருக்கு படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையை அணிவித்து வரவேற்பளித்தனர். அப்போது அவர்களிடம் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசுகையில், "இங்கு நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. உங்கள் அன்பைப் பெற வந்திருக்கிறேன். அந்த அன்பு எனக்கு கிடைத்துவிட்டது. எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன்.

உங்கள் வீட்டு பையனாக, உங்கள் சகோதரனாக என்னை நினைத்து நீங்கள் திட்டலாம், ஏன் அடிக்க கூட செய்யலாம். அதை நான் ஏற்றுக் கொள்வேன். மேலும் உங்களுக்கு தேவையானதை செய்ய என் உடல், உயிரை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்," என படுகு மொழியில் பேசினார்.

Tags:    

Similar News