டேங்கர் லாரி மோதி விபத்து

தடா கோவில் அருகே டேங்கர் லாரி மோதியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.;

Update: 2024-06-19 15:10 GMT

கோப்பு படம்

அரவக்குறிச்சி தாலுக்கா, நாகம்பள்ளி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் ஜூன் 17ஆம் தேதி இரவு 7:45 மணி அளவில், திண்டுக்கல்-கரூர் சாலையில்,தடா கோவில் பகுதியில் உள்ள தாயார் ஏஜென்சிஸ் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றபோது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், குப்பிச்சிபாளையம் அருகே உள்ள ஒழுகூர்பட்டி பகுதியைச் சேர்ந்த மலையாளி (47) என்பவர், வேகமாக ஓட்டி வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, நடந்த சென்ற சுரேஷ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் தலை மற்றும் மார்பில் பலத்த காயம் அடைந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுரேஷின் உறவினர் அரவக்குறிச்சி, அரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டேங்கர் லாரியை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மலையாளி மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News