பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை
திருவள்ளூவர் மாவட்டம்,மதுரவாயல் அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரவாயல் அடுத்த நூம்பல், பிள்ளையார் மடம் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவரது மகன் மகான்(என்றகுட்டி(27), மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலை அறையில் இருந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை பெற்றோர் சென்று பார்த்தபோது அறையில் மகன் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன மகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மகான் தனது தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் கூறி வந்ததாகவும் ஆனால் இதுவரை பெற்றோர் திருமணம் செய்து வைக்காமல் இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மிகுந்த சோகத்தில் வீட்டிற்கு சென்றவர் அன்று மறு தினமே தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.