மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி அருகே தூத்துக்குடி அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-29 07:13 GMT
தற்கொலை
தூத்துக்குடி அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம், வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சூடாமணி மகன் தங்கமணி (22). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரது தந்தை கண்டித்தாராம்.  இதனால் மது பழக்கத்தை கைவிட முடியாமல் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கமணி நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தருவைகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News