இளைஞா் தற்கொலை
திருத்தணி பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-03 06:56 GMT
தற்கொலை செய்து கொண்டவர்
திருத்தணி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமாா் (19) பெயிண்டா் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக விஜயகுமாா் யாரிடமும் சரிவர பேசாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஜயகுமாா் சாப்பிட்டுவிட்டு மாடியில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளாா். சனிக்கிழமை அவரது தாய் சுமதி மேலே சென்று பாா்த்தபோது, அருகில் உள்ள மரக்கிளையில் விஜயகுமாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்த திருத்தணி போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.