சிறுவாணி மலை அடிவாரத்தில் விடப்பட்ட உயிரியல் பூங்கா மான்கள்!

சிறுவாணி மலை அடிவாரத்தில் விடப்பட்ட உயிரியல் பூங்கா மான்களை வனத்துறை குழுக்கள் மூலம் கண்காணிக்கபடும் என கூறியுள்ளனர்.

Update: 2024-05-13 14:20 GMT

சிறுவாணி மலை அடிவாரத்தில் விடப்பட்ட உயிரியல் பூங்கா மான்களை வனத்துறை குழுக்கள் மூலம் கண்காணிக்கபடும் என கூறியுள்ளனர்.


கோவை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள வ.ஊ.சி உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்த நிலையில் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வண்டலூருக்கு இடம் மாற்றம் செய்யபட்டது.அங்கீகாரம் திரும்ப வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த மத்திய உயிரியல் ஆணையம் கோவை உயிரியல் பூங்காவில் இருந்த விலங்கினங்கள் இட மாற்றம் செய்தது.பெலிகான் பறவைகள்,பாம்புகள், முதலை மற்றும் மான்கள் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் விடப்பட்டன.இந்த நிலையில் இன்று அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத்துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வ.உ.சி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்களின் புழுக்கைகளை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டு மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று 26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவார வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவன உட்கொள்ளுதல்,நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News