ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி விமர்சித்துள்ளார்.;

Update: 2025-08-18 13:15 GMT

EPS

ஆற்காடு கணியம்பாடியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி , “2026ல் அதிமுக ஆட்சி அமைந்த உடன், கணியம்பாடியில் செங்கல் சூலைகளுக்குத் தேவையான வண்டல் மண் தடையில்லாமல் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். விவசாயிகள் மழை, வெள்ளம் போன்ற நேரத்தில் பாதிக்கப்படும் போது பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரண உதவி வழங்கி விவசாயிகளை காத்தது அதிமுக அரசு. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். குடிமராமத்து பணிகள் மூலம் தடையில்லாமல் நீர் வழங்கினோம். ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2024-2025 பட்ஜெட்டில் தாயுமானவர் என்ற புதிய திட்டம் தொடக்கம் என திமுக அரசு அறிவித்தது. அதில் கல்வி, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வீடு தேடி சென்று ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்திற்கு தாயுமானவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரேசன் பொருட்களை எந்த வாகனத்தில் கொண்டு செல்வீர்கள்? தனியார் வாகனத்திலா? ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்திற்காக தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டினார். 

Similar News