மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது: விஜய்
தவெக மாநாட்டு திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-08-20 12:47 GMT
vijay
மதுரை பாரபத்தியில் தவெக மாநாடு நடைபெறவுள்ள திடலில் ராட்சத கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்றுக் கொடிக் கம்பம் அமைப்பது தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தவெக மாநாட்டு திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய விஜய், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். முன்னதாக மாநாடு நடைபெறும் பகுதியில் நாளை மழை பெய்யக்கூடாது என இன்று அதிகாலை முதல் தவெக நிர்வாகிகள் யாகம் செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் யாகத்தில் பங்கேற்றனர்.