விவசாய தொழிலாளர்களுக்கு வீடு, மணமகளுக்கு தாலி, பட்டுசேலை: ஈபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-05 06:35 GMT

EPS

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம். கண்ணில் தெரியாத காற்றில் செய்த ஒரே ஊழல் கட்சி என்றால் அது திமுக தான். திமுகவின் 4ஆண்டுக் கால ஆட்சியில் மக்களிடம் 46 பிரச்சனைகள் இருப்பதாக ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார். இது தான் திமுகவின் சாதனை. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், உதவிகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 4,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்படும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும் என்றார். 

Similar News